ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி.. 5 மணி நேரம் போராடி மீட்பு.. ஜேசிபி மூலம் குழி தோண்டி உதவிய மூர்த்திக்கு மக்கள் பாராட்டு

0 1853
திருவாரூர் அருகே ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த நாய்க் குட்டியை 5 மணி நேரம் போராடி உயிருடன் மீட்க உதவியவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

திருவாரூர் அருகே ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த நாய்க் குட்டியை 5 மணி நேரம் போராடி உயிருடன் மீட்க உதவியவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

குன்னியூரைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் வீட்டிற்கு பின்புறம் உள்ள இடத்தில் குடிநீருக்காக 30 அடி ஆழ்குழாய் கிணறு தோண்டிய நிலையில், தண்ணீர் கிடைக்காததால் அதனை அப்படியே கைவிட்டுள்ளார். இந்நிலையில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த நாய்க்குட்டி ஒன்று, ஆழ்குழாய் கிணற்றில் விழுந்தது.

இதனை அடுத்து, மூர்த்தி அளித்த தகவலை அடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், கயிறு மூலம் மீட்க முயற்சித்து தோல்வியுற்றனர்.

பின்னர், மூர்த்தியின் செலவில் ஜே.சி.பி. இயந்திரத்தை வழவழைத்து அதன் மூலம் ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் தோண்டி நாய்க்குட்டி மீட்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments