ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் பறக்கும் தட்டில் பறப்பது உண்மையா.? தகவல்களை சேகரிக்கும் நாசா.!

0 3140

வானில் தென்பட்ட அடையாளம் காணப்படாத பறக்கும் தட்டு போன்ற மர்ம பொருட்கள் குறித்து கண்டறியவும், அதுகுறித்த தகவல்களை சேகரிப்பதற்குமான திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

அதிக ஆபத்துள்ள, அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்த வல்ல, வான்வெளி நடவடிக்கைகள் குறித்த ஆராய்ச்சியை நாசா தீவிரப்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, பறக்கும் தட்டு உள்ளிட்ட மர்ம பொருட்களின் நடமாட்டம் குறித்த ஆய்வுகளில் நாசா ஈடுபட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும், ஏலியன்கள் போன்ற அடையாளம் தெரிந்த, ஆனால், அனுமானிக்க முடியாத மர்ம நடமாட்டங்கள் என, 144  சம்பவங்களை அமெரிக்க உளவுத்துறை பட்டியலிட்டு, ஆய்வு செய்யுமாறு நாசாவிடம் கொடுத்துள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள நாசா, உளவுத்துறை பட்டியலிட்ட சம்பவங்களை விரிவாக விளக்க இயலாவிட்டாலும், அதை மறுப்பதற்கில்லை எனத் தெரிவித்துள்ளது.

ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள், பயணம் செய்வதாக கருதப்படும் விண்வெளி வாகனங்களை UFO அதாவது, அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் என்றும், வழக்குமொழியில், "பறக்கும் தட்டு" என்றும் குறிப்பிடப்படுவது நினைவுகூரத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments