உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் படிப்பைத் தொடரலாம் - ரஷ்யா அறிவிப்பு

0 1978
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் படிப்பைத் தொடரலாம் - ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனில் இருந்து படிப்பை பாதியில் விட்டு திரும்பிய இந்திய மாணவர்கள், ரஷ்ய பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று ரஷ்ய தூதரகத்தின் உயர் அதிகாரி ரோமன் பாபுஸ்கின் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உக்ரைனிலிருந்து வெளியேறிய இந்திய மாணவர்கள், முந்தைய கல்வி ஆண்டுகளை இழக்காமல் ரஷ்ய பல்கலைக் கழகங்களில் கல்வியை தொடரலாம் என்று தெரிவித்தார்.

இதனிடையே, இந்திய மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற்றிருந்தால், ரஷ்ய பல்கலைக் கழகங்களில் ஏற்றுக் கொள்ளப்படலாம் என்று ரஷ்ய கூட்டமைப்பின் கவுரவ தூதரும், திருவனந்தபுர ரஷ்ய மாளிகையின் இயக்குநருமான ரதீஷ் சி நாயர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments