பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இருப்பதாக கூறி இந்திய தேயிலையை திருப்பி அனுப்பியது ஈரான், தைவான்.!

0 2158

குறிப்பிட்ட அளவை விட பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இருப்பதாக இந்தியாவின் தேயிலையை ஈரான் மற்றும் தைவான் திருப்பி அனுப்பியது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் சர்வதேச தேயிலை சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகின. அதேநேரம் ஈரான் மற்றும் தைவான் நாடுகளின் நிராகரப்புகளே அதற்கு தடையாய் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா அனுப்பிய தேயிலை கண்டெய்னர்களில் தைவான் இரண்டு கண்டெய்னரையும், ஈரான் ஒன்றையும் திருப்பி அனுப்பியது. குறிப்பிட்ட அளவை விட Quinalphos ரசாயண மருந்து அதிகம் இருப்பதாக கூறி தைவான் திருப்பி அனுப்பியது.

தேயிலையில் சில சுகாதாரமற்ற பொருட்கள் இருப்பதாக கூறி ஈரான் நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments