சிந்து ஆற்றின் நடுவே வாகனத்துடன் சிக்கித் தவித்த 3 பேரை பத்திரமாக மீட்ட இந்திய ராணுவத்தின் மீட்புக் குழுவினர்!

0 1441

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோனாமார்க்கில் உள்ள சிந்து ஆற்றில் வாகனத்துடன் சிக்கித் தவித்த 3 பேரை இந்திய ராணுவத்தின் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

சோனாமார்க்கிற்கு சுற்றுலா சென்ற நான்கு பேர், பால்டல்-க்கு அருகே உள்ள சிந்து ஆற்றின் கரையைக் கடக்க முயன்ற போது, ஆற்றின் நடுவில் வாகனத்துடன் சிக்கிக்கொண்டனர்.

அமர்நாத் யாத்திரைக்காக பால்டால்-டோமலில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய ராணுவத்தின் ரோந்துக் குழுவினர், தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்து ஆற்றில் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments