தனது பணத்தை பறிகொடுத்துவிட்டு, பேருந்து செலவிற்காக வீட்டில் கைவைத்த திருடன்... மதுபோதை திருடனாக்கியது

0 2850

சேலம் மாவட்டம் ஓமலூரில், மதுபோதையில் பர்ஸை பறிகொடுத்த இளைஞர், பேருந்து செலவிற்காக வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற போது பிடிபட்டார்.

பாஸ்கரன் என்ற அந்த இளைஞர் மது போதையில் இருந்த போது மர்ம நபர்கள் அவரது பர்ஸை திருடி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

ஊருக்கு செல்ல பணம் இல்லாததால் அருகில் இருந்த வீட்டிற்குள் அதிகாலை புகுந்து மணி பர்ஸ், செல்போன், தங்கத் தோடு ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்ப முயன்ற போது வீட்டில் இருந்தவர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments