காருக்கு கதவு 4 இருக்கு... இப்படி தான் கார் உள்ளே போவேன் என பெண் அடித்த அந்தர் பல்டி

0 1507

டெல்லியில் பெண் ஒருவர் பூட்டிய காரின் ஜன்னல் வழியே பல்டி அடித்தபடி நுழைந்து காரை ஓட்டி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

டெல்லியில் வசிக்கும் கேவி என்ற பெண் ஒருவர் உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். இவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தாம் செய்யும் உடற்பயிற்சி தொடர்பான பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் பூட்டிய காரின் ஜன்னல் வழியே அசால்டாக பல்டி அடித்து நுழைந்து காரை ஓட்டிச் சென்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவுவதோடு பலருக்கும் உடற்பயிற்சி செய்யும் ஆர்வத்தினை தூண்டியுள்ளதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments