டிரோன்களில் பொருத்தும் சிறிய ஏவுகணைகளைப் பெருமளவில் தயாரிக்கும் துருக்கி..!

0 6452

துருக்கி நிறுவனம் டிரோன்களில் பொருத்தும் சிறிய வகை ஏவுகணைகளின் தயாரிப்பைத் தொடங்கியுள்ளது.

துபிதாக் எனப்படும் துருக்கிப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள போசோக் ஏவுகணை லேசர் வழிகாட்டியைக் கொண்டு இயங்குவதுடன், அருகில் உள்ளவற்றை உணரும் திறன், இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இதன் தாக்குதல் தொலைவை ஒன்பது கிலோமீட்டரில் இருந்து 15 கிலோமீட்டராகப் பொறியாளர்கள் நீட்டித்துள்ளதால் இது போர்முனையில் மிகவும் திறனுள்ளதாக விளங்கும்.

போசோக் சிறிய வகை ஏவுகணைகளைப் பலமுறை வெற்றிகரமாகச் சோதித்த பின் இப்போது, பெருமளவில் தயாரிப்பைத் தொடங்கியுள்ளது. ஐரோப்பாவின் பல நாடுகளுக்கு 96 ஏவுகணைகளை ஏற்றுமதியும் செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments