மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை விரைவில் அழகுபடுத்தப்படும் - சென்னை மாநகராட்சி துணை மேயர் அறிவிப்பு.!

0 1934

ப்ராஜெக்ட் ப்ளூ திட்டத்தின் கீழ் விரைவில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை அழகுபடுத்தப்படும் என சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பெசன்ட் நகரில் பிளாஸ்டிக் ஒழிப்பு, மறு சுழற்சி பயன்பாடு, குப்பைகளை தரம் பிரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கிவைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிர தூய்மை பணி திட்டத்தின் கீழ் நேற்று மட்டும் கூடுதலாக 3000 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

ஆக்கிரமிப்புகள் தொடர்பான புகார்கள் மாநகராட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments