வேன் மோதி சப்இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் உயிரிழப்பு... விபத்தை சரி செய்ய வந்த போது நிகழ்ந்த பரிதாபம்

0 4101

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விபத்தை சரி செய்ய வந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் மீது வேன் மோதியதில் 2பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ராசிபுரம் அடுத்த தனியார் கல்லூரி அருகே விபத்து ஒன்று நேரிட்டதாக வந்த தகவலை அடுத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் தலைமை காவலர் தேவராஜ் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.

பின்னர் இருவரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது வேன் மோதியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments