உரிய இருக்கை ஒதுக்கவில்லை என பயணி குற்றச்சாட்டு.. ரூ.50,000 இழப்பீடு வழங்குமாறு தெற்கு ரயில்வேக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு..!

0 2502
உரிய இருக்கை ஒதுக்கவில்லை என பயணி குற்றச்சாட்டு.. ரூ.50,000 இழப்பீடு வழங்குமாறு தெற்கு ரயில்வேக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு..!

ரயில் பயணத்தின்போது உரிய இருக்கை ஒதுக்காததாக குற்றச்சாட்டில் பயணிக்கு 50 ஆயிரம் இழப்பீடு வழங்க தெற்கு ரயில்வேக்கு மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை - சென்னை இடையிலான ரயில் பயணத்தில் இருக்கை ஒதுக்கியதில் குளறுபடி ஏற்பட்டதாகவும், அதுகுறித்து பரிசோதகரிடம் கேட்டபோது, தகாத வார்த்தைகளால் அவர் திட்டியதாகவும் சந்திரசேகரன் என்பவர் 25 லட்ச ரூபாய் இழப்பீடு கோரி ஆணையத்தில் புகாரளித்தார்.

மனுவை விசாரித்த ஆணையம், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக  50 ஆயிரம் ரூபாய் வழங்கவும், வழக்கு செலவுத் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கவும் ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments