புதுச்சேரியில் அழகு நிலையத்திற்குள் புகுந்து கத்தி முனையில் கொள்ளையடித்த கும்பல்..

0 2580
புதுச்சேரியில் அழகு நிலையத்திற்குள் புகுந்து கத்தி முனையில் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை சேர்ந்த 6 பேரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் அழகு நிலையத்திற்குள் புகுந்து கத்தி முனையில் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை சேர்ந்த 6 பேரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்தனர். 

புதுச்சேரி சங்கர்தாஸ் வீதியில் உள்ள அழகு நிலையத்தில் அண்மையில் புகுந்த இந்த கும்பல் பெண்களை மிரட்டி பணம் மற்றும் நகையை பறித்துக் சென்றது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொள்ளையில் தொடர்புடைய சத்யா என்ற முக்கிய குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments