தலைக் கவசம் இல்லை.. தலைக் கனம் தான் இருக்கு.. போலீசிடம் வம்பிழுத்த இளைஞர்..! செல்போனை பறித்ததால் ஜெயில்

0 3413
மதுரையில் தலைக்கவசம் அணியாமல் சென்ற இளைஞரின் வாகனத்தை தடுத்து வீடியோ பதிவு செய்த காவல்துறையினரிடம் செல்போனை பறித்துசென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

மதுரையில் தலைக்கவசம் அணியாமல் சென்ற இளைஞரின் வாகனத்தை தடுத்து வீடியோ பதிவு செய்த காவல்துறையினரிடம் செல்போனை பறித்துசென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

மதுரை தல்லாகுளம் காவல்நிலையம் அருகேயுள்ள சாலையில் வெள்ளிக்கிழமை மாலை போக்குவரத்து காவலர்களான ஆல்வின் ஜெபாஸ்டின், சின்ன கருத்தபாண்டி ஆகிய இருவரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த இரு இளைஞர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதிப்பதாக கூறியுள்ளனர்.

வாகனத்தில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள தனது வாகனத்தை எப்படி நிறுத்தலாம் என கூறி காவல்துறையினரிடம் இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து காவலர் ஆல்வின் ஜெபாஸ்டின் இளைஞரின் செயலை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதனை பார்த்த இளைஞர் காவலரின் செல்போனை தட்டிவிட்டதோடு, செல்போனை பறித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

இதனையடுத்து இளைஞரின் பைக்கை உருடியபடி இளைஞர் பின்னால் சென்று செல்போனை கேட்க அவர் கொடுக்க மறுத்து கெத்து காட்டி உள்ளார்.

ஒரு கட்டத்தில் காவலரான சின்ன கருத்தபாண்டி இளைஞரிடம் இருந்து செல்போனை திரும்ப பெற்றதோடு, இளைஞர் மீது தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்து, செல்போனை பறித்து சென்ற இளைஞரை பிடித்து விசாரித்த போது அவர், மதுரை யானைக்கல் பகுதியை சேர்ந்த வசந்த் என்பது தெரியவந்தது. தல்லாகுளம் காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வம்பர் வசந்தையும், கைது செய்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments