சாலையில் பின்னோக்கி வந்த கார் குழந்தை மீது ஏறி இறங்கி விபத்து... பதறவைக்கும் சிசிடிவி காட்சி
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே சாலையில் பின்னோக்கி வந்த கார், ஒரு குழந்தையின் மீது மோதி ஏறி இறங்கியதில் அந்த குழந்தை படுகாயமடைந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பட்டணம் நடுத்தெரு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் 2 வயது மகன் தருண், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக வந்த காரை திருப்புவதற்காக ஓட்டுனர் காரை பின்னோக்கி இயக்கிபோது, குழந்தை மீது மோதியது.
இதில் குழந்தை கீழே விழுந்ததை கவனிக்காத ஓட்டுநர் மீண்டும் காரை இயக்கியதில் குழந்தை மீது இரண்டு முறை கார் ஏறி இறங்கியது. கூச்சல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
Comments