பெண் சடலத்தை மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய பெண் கைது

0 2658

அரியலூர் அருகே, கிணற்றில் இருந்து சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் பெண் சடலத்தை மீட்ட போலீசார் அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூரின் அருங்கால் பகுதியில் ரெங்கராஜன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் மூட்டை ஒன்று மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்த போலீசார், அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர்.

விசாரணையில், அந்த மூட்டையை செல்வி என்ற பெண் தனது தோழிகளுடன் கிணற்றில் வீசியது தெரிய வந்தது. இதனையடுத்து, கரூரில் தலைமறைவாக இருந்த செல்வியை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments