கர்நாடகாவில் பொது வெளியில் முக கவசம் அணிவது கட்டாயம்

0 1840

கர்நாடகாவில் பொது வெளியில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

வணிக வளாகங்கள், உணவகம், பள்ளிக் கல்லூரிகள், பொது போக்குவரத்து, மருத்துவமனை, உள்ளரங்கு நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்திலும் மக்கள் முக கவசம் கட்டாயம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், முன்னெச்சரிக்கை டோசை செலுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் வலியுறுத்தியுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments