ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்ட ஒன்றரை மணி நேர ஆடியோ.. முதலமைச்சர் சார்பில் பேச வந்த நபர்கள் தம்மை மிரட்டியதாகப் புகார்..!

0 1972
ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்ட ஒன்றரை மணி நேர ஆடியோ.. முதலமைச்சர் சார்பில் பேச வந்த நபர்கள் தம்மை மிரட்டியதாகப் புகார்..!

கேரள முதல்வர் பினராயி விஜயன் சார்பில் சமரச பேச்சு நடத்திய ஷாஜ் கிரண், 'தங்க கடத்தல் வழக்கில் முதல்வரின் மகளை சம்பந்தப்படுத்தினால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்' என எச்சரிக்கை விடுத்திருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றத்தின் முன் ஆஜராகி சமீபத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

அப்போது, இந்த கடத்தலில் முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி, மகள், முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது என, அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,முதல்வர் தரப்பில் இருந்து தன்னிடம் சமரசம் பேச வந்த ஷாஜ் கிரண் என்பவருக்கும், தனக்கும் நடந்த உரையாடலை வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments