ராயப்பேட்டையில் ரூ.20 லட்சம் பணம் பறிமுதல்.. ஹவாலா பணமா என்பது குறித்து 2 பேரிடம் விசாரணை..!

0 1365
ராயப்பேட்டையில் ரூ.20 லட்சம் பணம் பறிமுதல்.. ஹவாலா பணமா என்பது குறித்து 2 பேரிடம் விசாரணை..!

சென்னை ராயப்பேட்டை சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபர்களிடம் இருந்து 20 லட்ச ரூபாயினை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் அருகே அதிக பணத்துடன் சந்தேகத்திற்கிடமாக 2 பேர் நிற்பதாக ராயப்பேட்டை  காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அங்கு விரைந்து  சென்ற  காவல்துறையினர் அந்த 2 பேரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் 20 லட்சம் ரூபாய்  இருப்பது தெரிய வந்ததை அடுத்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments