லாட்டரி சீட்டு விற்பனை: ஒரே நாளில் 18 பேர் கைது - போலீசார் நடவடிக்கை

0 1349

சென்னையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக ஒரே நாளில் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத லாட்டரிகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரிகள் ஒழிக்கும் பொருட்டு சென்னை பெருநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், தனிப்படை அமைத்து சந்தேகத்துக்குரிய பகுதிகளில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டர்.

ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். மேலும், 43 லாட்டரி சீட்டுகள் மற்றும் 13 ஆயிரத்து 995 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments