மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் 8 மணி நேரம் தாமதம்.. பாஜக 8 காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி..!

0 1995
மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் 8 மணி நேரம் தாமதம்.. பாஜக 8 காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி..!

மாநிலங்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 8 இடங்களிலும் காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகியவை தலா ஒரு இடத்தைப் பெற்றுள்ளன.

மாநிலங்களவையில் காலியாக இருந்த 57 இடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட 41 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய நான்கு மாநிலங்களில் எஞ்சிய 16 காலியிடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்ட்ரா ஹரியானாவில் எழுந்த புகார்களை அடுத்து வாக்கு எண்ணிக்கை 8 மணி நேரம் தாமதமானது. அதிகாலையில் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கர்நாடகத்தில் உள்ள நான்கு இடங்களில் பாஜக மூன்று இடங்களில் வென்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெற்றி பெற்று மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கன்னட நடிகர் ஜக்கேஷ் உள்ளிட்ட மேலும் இரண்டு பாஜக வேட்பாளர்களும் வென்றனர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்ராம் ரமேஷ், வெற்றி பெற்றுள்ளார்.

ஹரியானாவில் பாஜக ஒரு இடத்திலும், பாஜக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான அஜய் மக்கான் தோல்வியைத் தழுவினார்.

மகாராஷ்ட்ராவிலும் சிவசேனா தலைமையிலான கூட்டணியின் பலத்தைத் தாண்டி பாஜக மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தானில் பாஜக எம்.எல்.ஏக்கள் 2 பேர் கட்சி மாறி வாக்களித்ததை அடுத்து காங்கிரஸ் கட்சியின் 3வது வேட்பாளர் வெற்றி பெற்றார். பாஜக ஆதரவு பெற்ற சுபாஷ் சந்திரா தோல்வியைத் தழுவினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments