தந்தை இறந்ததால் செய்வது அறியாமல் தவித்த சிறார்கள்.. பணம் வசூலித்து இறுதி சடங்கை நடத்திய ஊர்மக்கள்.!

0 3655

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தந்தை இறந்ததால் செய்வது அறியாமல் சிறார்கள் தவித்த நிலையில், ஊர் மக்கள் இணைந்து பணம் வசூலித்து அவரது இறுதி சடங்கை நடத்தினர்.

ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசீலன் - உமா மகேஸ்வரி தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு முன் உமா மகேஸ்வரி உயிரிழந்த நிலையில், கூலி வேலை பார்க்கும் ஜெயசீலன் தனது பிள்ளைகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு திடீரென அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது பிள்ளைகள் செய்வதறியாது தவித்தனர். 

மேலும், அந்த ஊரில் அவர்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லை என கூறப்படும் நிலையில், ஊர் மக்கள் அனைவரும் இணைந்து பணம் வசூல் செய்து ஜெயசீலனின் இறுதி சடங்கை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments