ஏழுமலையான் கோவில் முன் காலணியுடன் போட்டோஷுட் நடத்திய விக்னேஷ் சிவன்-நயன்தாராவால் சர்ச்சை..!

0 4134
ஏழுமலையான் கோவில் முன் காலணியுடன் போட்டோஷுட் நடத்திய விக்னேஷ் சிவன்-நயன்தாராவால் சர்ச்சை..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புதுமண ஜோடி விக்னேஷ் சிவன்-நயன்தாரா சாமி தரிசனம் செய்து கல்யாண உற்சவத்தில் பங்கேற்றனர்.

கடந்த 6 ஆண்டுகளாக காதலித்த வந்த நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன், நேற்று திருமணம் செய்துக்கொண்ட நிலையில், இருவரும் இணைந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இருவருக்கும் தேவஸ்தானம் சார்பில் ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தரிசனத்திற்கு பின் வெளியே வந்த விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதியை அதிகளவில் காண ரசிகர்கள் சூழ்ந்ததனர்.

மேலும் தரிசனம் முடிந்து வந்த விக்னேஷ் சிவன்-நயன்தாரா, இதுவரை யாரும் செய்யாத வகையில் முதன்முதலாக ஏழுமலையான் கோவில் முன் போட்டோஷுட் நடத்தினர்.

காலணி அணிய தடைவிதிக்கப்பட்ட கோவில் வளாகத்தில் காலணிகளுடன் போட்டோஷுட் நடத்தியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments