இழந்த நற்பெயரை மீட்கவே ஆம்பர் ஹெர்டுக்கு எதிராக ஜானி டெப் வழக்கு தொடர்ந்தார் - விளக்கமளித்த வழக்கறிஞர்!

0 2181

இழந்த நற்பெயரை மீட்கவே முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்டுக்கு எதிராக ஜானி டெப் வழக்கு தொடர்ந்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டில் பத்திரிகை ஒன்றில் தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் ஆம்பர் ஹெர்ட் கட்டுரை எழுதியதாக ஜானி டெப் வழக்கு தொடர்ந்தார்.

இதில்,10 புள்ளி 35 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடாக வழங்க ஆம்பருக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், அதனை செலுத்த இயலாது அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது குறித்து பேட்டியளித்த ஜானி டெப்பின் வழக்கறிஞரான பெஞ்சமின் சியூ, இழப்பீட்டை செலுத்த வேண்டியதில்லை என்று கூட ஜானி தெரிவிக்கலாம் என்றும், பணத்திற்காக இந்த வழக்கு தொடரப்படவில்லை என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments