சென்னை-கோவை விரைவு ரயில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி... பத்திரமாக மீட்ட பாதுகாப்புப் படை காவலர்

0 2305

சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்தவரை ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் பத்திரமாக மீட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 6.10 மணியளவில் புறப்பட்ட கோவை விரைவு ரயிலில், பயணி ஒருவர் ஏற முற்பட்டபோது தவறி விழுந்தார்.

ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கி கொண்ட பயணியை கவனித்த அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர், துணிச்சலுடன் செயல்பட்டு பத்திரமாக மீட்டார்.

மீட்கப்பட்ட நபர், கோவையைச் சேர்ந்த 22 வயதான ஸ்ரீ பூவரசன் என்பது விசாரணையில் தெரியவந்தது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments