கர்ப்பம் கலைந்ததால் மாணவி செய்த விபரீத வேலையை பாருங்க..!

0 16952

சென்னை நெற்குன்றத்தில், திருமணத்திற்கு பின்னர் கல்லூரிக்குச் சென்று வந்த மாணவி கர்ப்பிணியான நிலையில், கருக்கலைந்ததால் விரக்தி அடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னை நெற்குன்றம் தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி லிங்கேஷ்வரி. இவருக்கு கடந்த வருடம் கண்ணன் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. இவரது கணவர் கண்ணன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் லிங்கேஷ்வரி தனியார் கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார்.

படிக்கும் போதே இருவருக்கும் திருமணம் நடந்ததால் திருமணத்திற்கு பின்பும் படிப்பை தொடர்ந்து வந்தார். லிங்கேஷ்வரி 3 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென லிங்கேஷ்வரியின் கர்ப்பம் கலைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மன அழுத்தத்தில் இருந்த லிங்கேஷ்வரி சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கோயம்பேடு போலீசார் லிங்கேஷ்வரி சடலத்தை கைப்பற்றி கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments