தனுஷ் பின்னணியில் இவரா ? பயில்வானுக்கு எதிராக பாய்ந்த பாடகி சுசித்ரா..!காவல் ஆணையரிடம் புகார்

0 6603
தனுஷ் பின்னணியில் இவரா ? பயில்வானுக்கு எதிராக பாய்ந்த பாடகி சுசித்ரா..!காவல் ஆணையரிடம் புகார்

பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா, யூ-ட்யூப் விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களைப் பாடியிருப்பவர் சுசித்ரா. இவரை பற்றி பிரபல திரைப்பட நடிகரும், யூடியூப் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சில அந்தரங்க விவரங்களைக் கூறி இருந்தார்.

இதையடுத்து பயில்வானுக்கு போன்செய்து தன் மீதான அவதூறுக் கருத்து குறித்து கேட்டு சுசித்ரா கடும் வாக்குவாதம் செய்தார்.

அதன் தொடர்ச்சியாக பயில்வான் ரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாடகி சுசித்ரா புகார் மனு அளித்துள்ளார்.

அதில் , கடந்த மார்ச் மாதம் தனியார் யூடியூப் சேனலில் பயில்வான் ரங்கநாதன் தன்னைப் பற்றி மிக அவதூறாகவும், போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்றும், பாலியலில் ஆர்வமுள்ளவர் எனவும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி அவதூறு பரப்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி அவதூறான கருத்துக்களை ஆபாசமான கருத்துகளையும் தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் பரப்பி வருவதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தன்னைப் பற்றி பரப்பி வரும் அவதூறான கருத்துக்களால் சினிமா துறையில் பாடல் வாய்ப்புகள் குறைந்து தன்னுடைய வருமானம் பூஜ்ஜியத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு சான்றாக கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட ஐடி ரிட்டர்ன்ஸ் பார்த்தாலே தெரியும் என கூறியுள்ளார்

2017 ஆம் ஆண்டு தன்னுடைய டுவிட்டர் பக்கம் ஒரு சில நபர்களால் ஹேக் செய்யப்பட்டு சுச்சி லீக்ஸ் விவகாரம் தொடர்பாக புகார் அளித்ததாகவும் . அந்தப் புகார் தொடர்பான போலீஸ் விசாரணையின் போது நடிகர் தனுஷ், இயக்குனர் வெங்கட்பிரபு ராஜா மற்றும் கார்த்திக் குமார் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக அப்போது தான் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ள சுசித்ரா, இப்போது பயில்வான் ரங்கநாதனும் இவர்களின் பின்னணியில் இருந்து செயல்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments