மாநிலங்களவைத் தேர்தல்: 16 இடங்களுக்கு வாக்குப்பதிவு!

நான்கு மாநிலங்களில் 16 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
மாநிலங்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து 6 பேர் உள்பட பல்வேறு மாநிலங்களில் 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஹரியானா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 16 காலியிடங்களுக்கு 21 பேர் மோதுவதால் கடும் இழுபறி நீடிக்கிறது.
குதிரை பேரத்தைத் தவிர்க்க ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஜெய்ப்பூர் மற்றும் உதய்பூரில் உள்ள நட்சத்திர விடுதிகளில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டனர்.
ஹரியானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டீஸ்கர் மாநிலம் ரெய்ப்பூரில் ரிசார்ட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளில் தங்கி உள்ளனர்.
மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் எம்.எல்.ஏக்கள் தங்கள் சார்ந்த கட்சிக்கு விசுவாசமாக இருப்பார்களா, கட்சி மாறி வாக்களிப்பார்களா என்ற கேள்வியால் ருசிகரமான காட்சிகள் அரங்கேற வாய்ப்புள்ளது. வாக்குகள் இன்றே எண்ணப்பட்டு மாலையில் முடிவுகள் வெளியாகி விடும்.
Comments