நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்ற தனியார் நட்சத்திர விடுதிக்கு முன்பு அடுத்தடுத்து 3 சாலை விபத்துகள்

0 3595
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்ற தனியார் நட்சத்திர விடுதிக்கு முன்பு அடுத்தடுத்து 3 சாலை விபத்துகள்

மாமல்லபுரம் அருகே நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்ற தனியார் நட்சத்திர விடுதிக்கு முன்பு அடுத்தடுத்து 3 சாலை விபத்துகள் நிகழ்ந்தன.

மாமல்லபுரம் நோக்கிச் சென்ற இன்னோவா கார் ஒன்று ஓட்டுநரின் கவனக்குறைவால் முன்னே சென்ற மற்றொரு இன்னோவா கார் மீது மோதியது. இதைத் தொடர்ந்து, மாமல்லபுரம் நோக்கி சென்ற வாடகை காரில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் பயணித்த நிலையில், பின்புறம் வந்த கார் அவரது காரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதே போல, மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற இரு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. விபத்தில் சிக்கியவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments