மாமூல் தர மறுத்ததால் ரவுடி கும்பலால் கடத்தப்பட்ட பார்கிங் யார்டு ஊழியர்கள் 3 பேர் மீட்பு

0 2470
மாமூல் தர மறுத்ததால் ரவுடி கும்பலால் கடத்தப்பட்ட பார்கிங் யார்டு ஊழியர்கள் 3 பேர் மீட்பு

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில், மாமூல் தர மறுத்ததால் ரவுடி கும்பலால் கடத்தப்பட்ட பார்கிங் யார்டு ஊழியர்கள் 3 பேரை போலீசார் 24 மணி நேரத்தில் மீட்டனர்.

சோழவரத்தில் உள்ள லாரி பார்கிங் யார்டில் பணியாற்றும் ஜெயப்பிரகாஷ் என்பவர் இரவு வீட்டிற்கு வர வில்லை என அவரது மனைவி போலீசில் புகாரளித்தார். அங்கு சென்று போலீசார் விசாரித்த போது, 3 ஊழியர்களை மர்ம கும்பல் ஒன்று கடத்தி சென்றுள்ளது தெரியவந்தது.

செல்போன் சிக்னல் மூலம் அவர்கள் காவாங்கரையில் இருப்பதை கண்டறிந்த போலீசார் விரைந்து சென்று 3 ஊழியர்களையும் மீட்டனர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments