ரஜினியே வந்தாலும் பேட்டரி கார் தான்.! நயன் திருமணத்தில் Full கெடுபிடி.!

0 5248

நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு வந்த முக்கிய விருந்தினர்கள், குறிப்பிட்ட இடத்தில் இருந்து மணவிழா பந்தலுக்கு பேட்டரி காரில் அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களும் தப்பவில்லை.

மாமல்லபுரத்தை அடுத்த வடநெம்மேலி ’ஷெரட்டன் கிராண்ட்' கடற்கரை நட்சத்திர விடுதியில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது.

திருமண விழாவிற்கு வந்த திரைபிரபலங்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், நட்சத்திர விடுதியின் நுழைவு வாயில் அருகே, தங்கள் வாகனத்தில் இருந்து இறங்கி, பேட்டரில் காரில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி உள்பட அனைத்து உச்சப்பட்ச நட்சத்திரங்களும், பேட்டரி கார்களிலேயே, மண விழா பந்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

எப்போதும், பவுன்சர்கள் புடைசூழ வருகை தரும் பிரபலங்களில் சிலர், பேட்டர் கார் அழைப்பு முறை கண்டு, அதிருப்தி அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments