யாரா இருந்தாலும் சரி..! நயன், விக்கி திருமணத்தை காண கியூ-ஆர் கோட் கட்டாயம்.!

0 3528
யாரா இருந்தாலும் சரி..! நயன், விக்கி திருமணத்தை காண கியூ-ஆர் கோட் கட்டாயம்.!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்துக்கு உள்ளே செல்ல, கியூ ஆர் கோட் வழியாக ஸ்கேன் செய்த பின்னரே, பிரபலங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் கடற்கரை விடுதியில் இயக்குநர் விக்னேஷ் சிவன்- நடிகை நயன்தாரா திருமணம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த திரைப்பிரபலங்களுக்கு மணமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட திருமண அழைப்பிதழில் கியூஆர் கோடு அச்சடிக்கப்பட்டிருந்தது.

அந்த அழைப்பிதழை விடுதியின் நுழைவாயில் முன்பு பாதுகாப்பு பணியில் இருக்கும் தனியார் நிறுவன பாதுகாவலர்கள் தங்களது கையில் உள்ள செல்ஃபோன் மூலமாக ஸ்கேன் செய்து உள்ளே அனுப்பினார்கள். இதனால் நிகழ்வுகளுக்கு வரும் விருந்தினர்கள் விடுதியின் வாயிலின் முன்பு காத்திருந்து உள்ளே சென்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments