அரசுப் பள்ளிகளிலேயே எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் செயல்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்.!

0 2194

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 2 ஆயிரத்து 381 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குள் அமைந்த அங்கன்வாடி மையங்கள் சோதனை அடிப்படையில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளாக மாற்றி சில ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேவை அதிகரித்ததால், எல்.கே.ஜி, யூ.கே.ஜிக்கு பாடமெடுத்தவர்கள், 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு சென்றதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று, அரசு பள்ளிகளிலேயே எல்.கே.ஜி, யூ.கே வகுப்புகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments