நள்ளிரவில் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டிய 3 மர்ம நபர்கள்.. தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.!

0 2277

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் பயணிகளிடம் கத்தி காட்டி மிரட்டியவர்களை, பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளிடம், 3 பேர் மதுபோதையில் கத்தியை காட்டி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அவர்களை சுற்றுவளைத்து பிடித்த பொதுமக்கள், கத்தியை பிடிங்கியதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதில் சிலர் 3 மர்ம நபர்களையும் தாக்கிய நிலையில் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 3 பேரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments