ஆபத்தில் முடியும் ஆன்லைன் ரம்மி... கடன் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட காவலர்.!

0 1946

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டால், லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடன் தொல்லைக்கு ஆளாகிய காவலர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

மாடன்பிள்ளை தர்மம் பகுதியை சேர்ந்த ரவி செல்வன், அஞ்சு கிராமம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் மிகுந்த அவர், சரிவர பணிக்கு செல்லாமல் அக்கம் பக்கத்தினரிடம் லட்சக்கணக்கில் கடன் பெற்று விளையாட்டிற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பணத்தை இழந்த விரக்தியில் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். தோட்டத்தில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments