பாகிஸ்தானில் 1,572 மீ. பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து.. 22 பேர் உடல் நசுங்கி பலி..!

0 1951
பாகிஸ்தானில் 1,572 மீ. பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து.. 22 பேர் உடல் நசுங்கி பலி..!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்தனர்.

பலுசிஸ்தானின் லோராலியாவில் இருந்து சோப் நகருக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று புறப்பட்டு சென்றது.

அக்தர்சாய் மலைப்பகுதியில் உள்ள வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், ஆயிரத்து 572 மீ. உயர மலைச்சாலையில் இருந்து பள்ளத்தில் உருண்டு விழுந்தது.

இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த 22 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments