தண்டவாளம் அருகே நின்ற இயந்திரம் மோதி ரயில் விபத்து.. ரயில் பெட்டிகள் தடம் புரண்டு 22 பயணிகள் பலி..!

0 4194
தண்டவாளம் அருகே நின்ற இயந்திரம் மோதி ரயில் விபத்து.. ரயில் பெட்டிகள் தடம் புரண்டு 22 பயணிகள் பலி..!

தெற்கு ஈரான் நோக்கி சென்ற பயணிகள் ரயில் தண்டவாளம் அருகே இருந்த மணல் அள்ளும் இயந்திரத்தின் மீது மோதி தடம்புரண்ட விபத்தில் 22 பயணிகள் உயிரிழந்தனர்.

டாபாஸ் நகரில் இருந்து யாஸ்த் நகர் நோக்கி 350 பயணிகளுடன் சென்ற ரயில் தண்டவாளம் அருகே இருந்த மணல் அள்ளும் ராட்சத இயந்திரம் மீது மோதியது.

கட்டுப்பாட்டை இழந்து ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. பெட்டிகள் குலுங்கியதில் அதிலிருந்த பயணிகள் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டனர்.

சம்பவ இடத்தில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 22 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் 90 பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments