அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து தரைமட்டம்.. ஒருவர் பலி - 16 பேர் படுகாயங்களுடன் மீட்பு..!

0 2029
அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து தரைமட்டம்.. ஒருவர் பலி - 16 பேர் படுகாயங்களுடன் மீட்பு..!

மும்பை பாந்த்ராவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து தரைமட்டமான விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கிய 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

சாஸ்திரி நகரில் உள்ள இரண்டு மாடி குடியிருப்பு இரவில் திடீரென இடிந்து விழுந்தது. ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கிய 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments