இனி போட்டோ ஷாப்புல தான் குடித்தனம் நடத்தணும் ..! தன்னை தானே மணந்து கொள்ளும் பெண்..!

0 2557
இனி போட்டோ ஷாப்புல தான் குடித்தனம் நடத்தணும் ..! தன்னை தானே மணந்து கொள்ளும் பெண்..!

தன்னை தானே திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்த பெண்,எதிர்ப்புகளை மீறி ஆண் மற்றும் பெண் வேடமிட்டு போட்டோஷாப் மூலம் திருமணத்திற்கு தயாராகி வருகின்றார்.

தன்னை தானே திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்த குஜராத்தை சேர்ந்த ஷாமா பிந்து என்ற பெண்ணுக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில் அதனை மீறி தன்னை தானே திருமணம் செய்து கொள்வதில் ஷாமா பிந்து தீவிரமாக உள்ளார்.

கணவனும் யானே.. மனைவியும் நானே.. என்று திருமணத்துக்கு முந்தைய மெகந்தி நிகழ்ச்சிக்கு ரெடியாகி வரும் ஷாமா பிந்து, அவனும் அவளுமாக தானே உருவாக்கிய போட்டோ ஷாப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஆண் போல வேடமிட்டும், பெண்ணாகவும் சிங்கிளாக எடுத்த புகைப்படங்களை வெட்டிங் புகைப்பட கலைஞர்களின் கைவண்ணத்தால் மிங்கிளாக்கி உள்ளார்.

ஷாமா பிந்து செய்யும் இந்த வினோத திருமணம் தங்கள் மத வழக்கத்திற்கு எதிரானது என சிலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதனை மீறி தன்னை தானே மணந்து கொள்வதில் ஷாமா பிந்து தீவிரமாக உள்ளது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments