அண்ணன் திருமணத்திற்கு பந்தகால் அமைக்க வேப்பிலை பறிக்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பலி

அண்ணன் திருமணத்திற்கு பந்தகால் அமைக்க வேப்பிலை பறிக்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பலி
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அண்ணன் திருமணத்திற்கு பந்தகால் அமைக்க வேப்ப மரத்தில் ஏறி இலை பறித்த போது, மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கைலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை, நாளை மறுநாள் நடைபெறவுள்ள தனது பெரியப்பா மகனின் திருமணத்திற்கு பந்தகால் அமைக்க வேப்பிலை பறிக்க சென்றுள்ளார்.
அப்போது வயலில் உள்ள வேப்ப மரத்தை ஒட்டி இருந்த மின்கம்பி ஏழுமலையின் காலில் உரசி மின்சாரம் தாக்கியதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மரத்தில் கருகிய நிலையில் தொங்கியபடி இருந்த இளைஞர் ஏழுமலையில் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத நிலையில், விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Comments