விக்ரம் திரைப்படத்தில் நடித்த நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் கை கடிகாரத்தை பரிசளித்த கமல்ஹாசன்

0 4416
விக்ரம் திரைப்படத்தில் நடித்த நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் கை கடிகாரத்தை பரிசளித்த கமல்ஹாசன்

விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் சூர்யாவிற்கு, ரோலக்ஸ் கை கடிகாரத்தை கமல்ஹாசன் பரிசளித்தார்.

திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு Lexus காரையும், உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு TVS Apache RTR 160 இருசக்கர வாகனத்தையும் பரிசளித்தார்.

படத்தின் கிளைமேக்ஸில் 3 நிமிட காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களை திகைக்க வைத்த சூர்யாவுக்கு கமல்ஹாசன் ரோலக்ஸ் கை கடிகாரத்தை பரிசளித்த நிலையில், அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments