சொந்த அண்ணனை ஓட ஓடவிட்டு கொடூரமாக வெட்டிக்கொலை செய்த தம்பி... வெளியான சிசிடிவிக் காட்சி

0 4257

ஈரோட்டில் சொந்த அண்ணனை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்த நிலையில், கொலை தொடர்பான சிசிடிவிக் காட்சி வெளியானது.

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அருண்பாண்டியன், மது பழக்கத்திற்கு அடிமையாகி அதிக கடன் வாங்கிவிட்டு, வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்ட நிலையில் ஈரோட்டில் வசிக்கும் தம்பி அஜித் குமார் சந்திக்க சென்ற அருண்பாண்டியன், அங்கும் மதுபோதையிலேயே சுற்றித்திரிந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அஜித் குமார், அண்ணன் அருண்பாண்டியனை அரிவாளால் உயிர் போகும்வரை கழுத்தில் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார். தகவலறிந்து உடலை கைப்பற்றிய போலீசார், அஜித்குமாரை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments