சாலையில் சென்று கொண்டிருந்த போதே தீப்பற்றி எரிந்த புல்லட் பைக்

0 1820

சென்னை நுங்கம்பாக்கத்தில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த ராயல் என்பீல்டு பைக் தீ திடீரென தீப்பற்றி எரிந்தது.

சென்னையை சேர்ந்த விஜய் என்ற இளைஞர், அவரது இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான ராயல் என்பீல்டு பைக்கில், ஸ்டெர்லிங் ரோட்டில் இருந்து வள்ளுவர்கோட்டம் சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென பைக் சூடானதாக கூறப்படுகிறது.

இதனை சுதாரித்தக்கொண்ட விஜய், உடனடியாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நகர்ந்த நிலையில் பைக் முழுவதும் தீப்பற்றி மளமளவென எரிந்தது.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயணை அணைத்தனர். இருப்பினும் பைக் முழுவதும் எரிந்து நாசமான நிலையில், பேட்டரியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பற்றியது விசாரணையில் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments