வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட நிலத்தில் அடுத்தடுத்து கிடைத்த ஐம்பொன் சிலைகள்..!

0 2833

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட நிலத்தில் அடுத்தடுத்து ஐம்பொன்னால் ஆன சிலைகள் கிடைத்துள்ளன.

மண்டித் தெருவில் வசிக்கும் முத்து என்பவர் தனது இடத்தில் வீடு கட்டுவதற்காக ஜே.சி.பி இயந்திரத்தின் மூலமாக குழி தோண்டிய போது ஒன்றரை அடி சிலை ஒன்றும், ஒரு அடியில் இரண்டு சிலைகள் மற்றும் கால் அடி அளவுள்ள பெருமாள் சிலை மற்றும் 7 உலோக கலயங்களும் கிடைத்துள்ளன. 

இந்த சிலைகள் அனைத்தும் ஐம்பொன்னால் ஆனது என்றும் கோடிக்கணக்கில் மதிப்பு உள்ளவை என்றும் கூறப்படுகிறது. இவை அனைத்தும் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments