வட இந்தியாவில் வெப்பம் கணிசமாக குறையும் - டெல்லியில் சாரல் மழைக்கு வாய்ப்பு

0 1273

டெல்லி உள்ளிட்ட வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் வரும் 11-ந்தேதி முதல் வெப்பம் கணிசமாக குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பநிலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், சில இடங்களில் வெப்ப அலையும் வீசியது.

இதனிடையே, தலைநகர் டெல்லியில் 44 டிகிரி செல்சியஸ் முதல் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவி வரும் நிலையில், அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments