வீட்டில் தனியாக இருந்த தாய், மகளை இஸ்திரி பெட்டியால் அடித்து கொலை செய்து 16 சவரன் நகை திருட்டு..!

0 2837

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த தாய், மகளை இஸ்திரி பெட்டியால் அடித்து கொன்ற மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முட்டம் கிராமத்தில், பங்களா வீட்டில் வசித்த திரேசம்மாள் மற்றும் அவரது மகள் பவுலின் மேரியை தொடர்பு கொள்ள முடியாமல் உறவினர்கள் வீட்டு கதவை உடைத்து பார்த்த போது இருவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து, முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளது தெரியவந்தது.

வீட்டில் இருந்த இஸ்திரி பெட்டியால் தாய், மகளை தலையில் தாக்கி கொன்று விட்டு அவர்களின் தங்க செயின்களை திருடி சென்றுள்ளனர்.அதே சமயம், அவர்கள் அணிந்திருந்த மற்ற நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள் திருடப்படாமல் இருந்துள்ளது.

கொள்ளையடிக்கும் நோக்கில் தாய், மகள் கொலை செய்யப்பட்டனரா அல்லது வேறேதும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments