முன்னாள் காவல்துறை அதிகாரியை கத்தியால் குத்தி கொலை செய்த 4 போதை ஆசாமிகள் கைது.!

0 2026

மதுரை மாவட்டம் சோழவந்தானில், மது அருந்த பணம் தர மறுத்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரியை கத்தியால் குத்தி கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓய்வுபெற்ற காவல் சார்பு ஆய்வாளரான ஜோதி, ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் காவலாளியாக பணியாற்றி உள்ளார்.

இயற்கை உபாதை கழிக்க வைகை ஆற்றுப்பகுதிக்கு அவர் சென்ற போது போதை ஆசாமிகள் 4 பேர் மது அருந்த பணம் கேட்டுள்ளனர்.

தர மறுத்ததால் அவரை கத்தியால் குத்தி விட்டு பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments