விவசாயிகளுக்கு மானிய விலையில் அறுவடை இயந்திரங்கள், டிராக்டர்களை வழங்கிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.!

0 1937

ஆந்திர மாநிலம் குண்டூரில், விவசாயிகளுக்கு மானிய விலையில் அறுவடை இயந்திரங்கள், டிராக்டர்களை வழங்கிய அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, அவற்றின் செயல்பாட்டை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஒய்.எஸ்.ஆர் இயந்திர சேவா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சுமார் 3 ஆயிரத்து 800 டிராக்டர்கள் மற்றும் 380 அறுவடை இயந்திரங்கள்  வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, விவசாயிகளுக்காக மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்து 750 இடங்களில் இயந்திர சேவை மையங்கள் அமைக்கப்படும் என்றும் அந்த மையங்களை அணுகி விவசாயிகள் குறிப்பிட்ட காலத்திற்கு குறைந்த வாடகையில் இயந்திரங்களை பெற்று பயனடையலாம் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments