கைக்கு எட்டிய துப்பாக்கி.. தவறுதலாகத் தந்தையை சுட்டுக் கொன்ற 2 வயது மகன்.. தாய் கைது.!

0 2285

அமெரிக்காவில், 2 வயது சிறுவன் ஒருவன் தன் தந்தையை தவறுதலாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மியாமி நகரில் வசித்து வந்த ரெக்கி மாப்ரி என்பவர் கணிணியில் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்த போது அவரது பையில் இருந்த கை துப்பாக்கியை விளையாட்டாக எடுத்து அவரது 2 வயது மகன் சுட்டுள்ளான்.

முதுகில் தோட்டா பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குழந்தைக்கு துப்பாக்கி கிட்டும் வகையில் கவனக்குறைவாக இருந்த தாயாரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments