10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

0 2526

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

தமிழக கடலோர பகுதி, தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் 2 நாட்களுக்கு மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments