கந்து வட்டி கொடுமை காரணமாக ஆயுதப்படை காவலர் தற்கொலை..!

0 1962

கடலூரில் கந்து வட்டி கொடுமை காரணமாக ஆயுதப்படை காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புவனகிரியை சேர்ந்த ஆயுதப்படை காவலரான செல்வக்குமார், கடந்த 1ஆம் தேதி கடலூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் அருகே திடீரென மயங்கி விழுந்த நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

விசாரணையில், அவர் குடும்ப செலவுக்காக ஒரு பெண்ணிடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய நிலையில், அந்த பணத்தை திருப்பி செலுத்தி விட்டதாகவும் , ஆனால் தற்போது வட்டியுடன் சேர்த்து அந்த பெண் 12 லட்சம் ரூபாய் கேட்டு தொந்தரவு செய்வதால் மனவேதனையில் விஷம் குடித்தது தெரியவந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆயுதப்படை காவலர் செல்வக்குமார் உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments